ஜனாதிபதியை நாம் தனித்து சந்திப்போம் : கூட்டத்தில் பங்கேற்காமைக்கான காரணத்தை வெளிப்படுத்தினார் மாவை

Published By: R. Kalaichelvan

19 Jul, 2019 | 11:10 AM
image

(ஆர்.யசி)

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் முக்­கி­ய­மான சில உறுப்­பி­னர்கள்  வெளிப்பிர­தே­சங்­களில் உள்ள கார­ணத்­தி­னாலும் வேறு சில முக்­கிய கார­ணங்­க­ளுக்­கா­கவும் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பில்  கலந்­து­கொள்­ள­வில்லை என இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

கன்­னியா பிள்­ளையார் கோவில் விவ­காரம் குறித்து ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்தும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பில் கலந்­து­கொள்­ள­வில்லை. இது குறித்து வின­வி­ய­போதே அவர் இதகை குறிப்­பிட்டார். 

 மேலும் கல்­முனை வடக்கு  பிர­தேச செய­லக விவ­காரம் குறித்து கோடிஸ்­வரன் எம்.பிக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அவ­ரையும் கலந்­து­கொள்ள வேண்டாம் என கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யுள்­ளது. 

  இது தொடர்பில் இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா  குறிப்­பி­டு­கையில், 

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் முக்­கி­ய­மான சில உறுப்­பி­னர்கள்  வெளிப் பிர­தே­சங்­களில் உள்ள கார­ணத்­தி­னாலும் வேறு சில முக்­கிய கார­ணங்­க­ளுக்­கா­கவும் தாம் கலந்­து­கொள்­ள­வில்லை. 

இந்த சந்­திப்பு நேற்று இடம்­பெற்­றது. ஆனால் நாம் கலந்­து­கொள்­ள­வில்லை. தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் மாத்­திரம் ஜனா­தி­ப­தியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்த கோரிக்கை விடுத்­துள்ளோம். அனே­க­மாக அடுத்த  பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் போது அல்­லது  அந்த வாரத்தில் ஏதேனும் ஒரு நாளில் நாம் ஜனா­தி­ப­தியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்த வாய்ப்­புகள் உள்­ளது. 

அதேபோல் கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக விவ­காரம் குறித்தும் அமைச்சர் வஜிர அபே­வர்­தன மற்றும் கூட்­ட­மைப்பின் கோடீஸ்­வரன் எம்.பி ஆகி­யோரை சந்­திக்­கவும் ஜனா­தி­பதி அழைப்பு விடுத்­தி­ருந்தார். ஆனால் இது குறித்து இப்­போது ஒரு தீர்­மானம்  எட்­டப்­பட்­டுள்­ளது. புதிய கணக்­காய்­வாளர் நிய­மிக்கப் பட்­டுள்ள நிலை­யிலும் முதற்­கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் ஜனா­தி­ப­தியை இப்­போது  சந்திக்க வேண்டிய அவசியம் இல்லையென நாம் நினைக்கின்றோம். ஆகவே கோடீஸ்வரன் எம்.பி இப்போது சந்திக்க தேவையில்லை என நம் கூறியுள்ளோம்.  அவரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43