வெள்ளத்தால் ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 13 குடும்பங்கள் பாதிப்பு

Published By: Daya

19 Jul, 2019 | 09:55 AM
image

ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக அப்பகுதியையில் வசித்து வந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு அம்பகமுவ பிரதேச செயலகத்தின் இடர்முகாமைத்துவ நிலையத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

மலையகத்தின் நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் பல குளங்களினதும், நீர்த்தேக்கங்களினதும் நீர் மட்டம் கணிசமான அளவில் உயர்ந்துள்ளதுடன், பன்மூர் குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் நீர் பெருக்கெடுத்ததன் காரணமாகவே வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

 இதேவேளை பன்மூர் குளத்தின் அணைக்கட்டு உறுதியற்ற நிலையில் காணப்படுவதாகவும், இது எந்த வேளையிலும் உடைந்து ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது மலையகத்தில் ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலை நீடிக்குமானால் இந்த குளத்தின் நீர் அதிகரித்து அணைக்கட்டு உடைவதுடன், பன்மூர், அளுத்கம, டிக்கோயா ஆகிய பகுதிகளில் பல வீடுகள் நீரில் மூழ்கும் ஆபத்து ஏற்படலாம் என மேலும்  தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டான பகுதியில் நாளை 16 மணி...

2025-03-18 09:00:26
news-image

இன்றைய வானிலை

2025-03-18 06:13:34
news-image

'பூஜா பூமி' அபிவிருத்தி திட்டத்தின் கீழ்...

2025-03-18 04:13:02
news-image

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில்...

2025-03-18 04:01:35
news-image

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

2025-03-18 03:53:38
news-image

முறையாக நடந்துகொள்ள தெரியாத ஒருவருக்கு நாங்கள்...

2025-03-18 03:48:50
news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14
news-image

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை புறக்கணிப்பது...

2025-03-18 02:44:35
news-image

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய...

2025-03-18 02:36:35
news-image

சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

2025-03-17 15:27:32
news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08