பாண் விலை அதிகரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

By Vishnu

18 Jul, 2019 | 06:51 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கோதுமை மாவின் விலையினை குறைப்பதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியினை தொடர்ந்து நேற்று முதல் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பதாக எடுத்த தீர்மானம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்  சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து உள்ளூர் மட்டத்தில் கோதுமை மாவின் விலை செவ்வாய்க்கிழமை முதல் கிலோ ஒன்றுக்கு 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. 

இதன் காரணமாக கோதுமை மா உற்பத்திசார்ந்த உணவு பொருட்களின் விலையினை அதிகரிக்க வேண்டிய தேவை பேக்கரி உரிமையாளர் சங்கத்திற்கு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right