(எம்.எப்.எம்.பஸீர்)

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பிலான பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி தொடர்பிலான வழக்கின் குருணாகல் நீதிவனின் நடவடிக்கைகள் தொடர்பில் விஷேட விசாரணைகளை நடாத்துமாறு இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் சுயாதீன நீதிச் சேவை ஆணைக் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது. 

குறித்த சங்கம் இன்றைய தினம் இந்த முறைப்பாட்டை எழுத்து மூலம் நீதிச் சேவை ஆணைக் குழுவிடம் கையளித்துள்ளது. 

குருணாகல் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுனரால் கைது செய்யப்பட்ட வைத்தியர் ஷாபி குருனாகல் வைத்தியசாலையின் வைத்தியர் என்பதுடன்,  அவருக்கு எதிராக விசாரிக்க உத்தரவிட்ட குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும்  அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் ஆகியோரின்  மனைவிமாரும் குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர்கள் என குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்ப்ட்டுள்ளது.