மலையகத்தில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சி தோட்ட மக்களால் முறியடிப்பு

Published By: Digital Desk 3

18 Jul, 2019 | 04:40 PM
image

நுவரெலிய கந்தப்பளை தோட்டப் பகுதியில் உள்ள காவல் தெய்வச் சந்நிதியில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

கந்தப்பளை கோட்லோஜ் பகுதியில் உள்ள மாடசாமி காவல் தெய்வ ஆலயத்தில் பொலனறுவைப் பகுதியை சேர்ந்த தேரர் ஒரவரினால் இந்தப் பௌத்த கொடி ஏற்றப்பட்டது.

இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இது தொடர்பில் கந்தப்பளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து நுவரெலிய  பொலிஸ் நிலைய பொலிஸ் அத்தியட்சகர் ,நுவரெலியா பிரதேச கபைத்தலைவர் வேலு யோகராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கலந்துரையாடியபின் கொடியை அகற்றினர். இதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் மனோகணேசன் சம்பவம் தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் தெரிவிக்கையில்,

மலைநாட்டில் கோட்லோஜ் தோட்டத்தில் அமைந்துள்ள மாடசாமி கோவிலில் பெளத்த கொடியை அங்குள்ள விஹாராதிபதி ஏற்றியது பிழையானது. பெளத்த பிக்குகள் சட்டத்தை கையில் எடுப்பது பிழை. இந்த பிக்குக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுமார் 300 கிலோ போதைப்பொருட்களுடன் 6...

2025-11-12 10:41:26
news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18