(இராஜதுரை ஹஷான்)

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையாமல்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அரசியல் எதிர்காலம் இனி  கிடையாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த, சுதந்திர  கட்சியின் ஒரு தரப்பினரின் தவறான வழிநடத்தலின் காரணமாகவே  கட்சி இன்று பலவீனமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக  பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்ற போதும் இதுவரையில் எக் குற்றச்சாட்டும் சட்ட நடவடிக்கைகளுக்கு விரைவுப்படுத்தப்படவில்லை. 

தற்போது பௌத்த மத பிக்குகள் தொடர்பில் தேவையற்ற கருத்தினை குறிப்பிட்டு தேசிய மரபுகளையும் அவமதித்துள்ளார். இவருக்கு எதிராக  ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் எந் நடவடிக்கைகளையும்மேற்கொள்ளாது. கடந்த  காலங்களில் குறிப்பிட்ட கொக்கைன் விவகாரம் போன்றே இதுவும் மறக்கடிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் தலைம காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.