சமூக வலைத்தளமாகிய பேஸ்புக் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை மிரட்டிய நபர், எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், அண்மையில் மலேஷியாவில் இருந்து இலங்கை வந்து போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.