1018 கிலோ கடல் அட்டைகள் மீட்பு

Published By: Daya

18 Jul, 2019 | 02:44 PM
image

மன்னார் எருக்கலம் பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக வைத்திருந்த 1018.9 கிலோ கிராம் எடை கொண்ட உலர்ந்த கடல் அட்டைகளை நேற்று புதன் கிழமை கடற்படையினர் மற்றும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது மீட்டுள்ளதோடு, சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடற்படையினர் மற்றும் மன்னார்  மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இணைந்து  தலை மன்னார் மற்றும் எருக்கலம்பிட்டி பகுதியில் நேற்று புதன் கிழமை திடீர் சோதனைகளை  மேற்கொண்டனர்.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது எருக்கலம்பிட்டி பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து    வைக்கப்பட்டிருந்த உலர்ந்த கடல் அட்டைகளை கண்டு பிடித்தனர்.


சுமார் 1018.9 கிலோ கிராம் உலர்ந்த கடல் அட்டைகள் மீட்கப்பட்டதோடு, வீட்டு உரிமையாரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களம் அனுமதித்த அளவை மீறி, அதிக அளவு கடல் அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, உலர்ந்த கடல் அட்டைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47