‘ராட்சசன்’ படத்தை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் ‘F I R’ ( ஃபைசல் இப்ராஹிம் ரைய்ஸ்) என பெயரிடப்பட்ட படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது ‘இன்று நேற்று நாளை 2 ’படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால், அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் தயாராகவிருக்கும் ‘எஃப் ஐ ஆர்’ என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் தெரிவிக்கையில்,

“ சென்னையில் வசிக்கும் ஒரு இளம் இஸ்லாமிய இளைஞனின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களே படத்தின் கதை. இதில் நடிகை மஞ்சிமா மோகன் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவர் மூத்த சட்டத்தரணி ஒருவரிடம் பயிற்சி பெறும் சட்டத்தரணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நாயகனின் கதாபாத்திரம் தீவிரவாதத்தை பின்னணியாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாதத்தால் ஒரு அப்பாவி இஸ்லாமிய இளைஞனின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை வித்தியாசமான கோணங்களில் சொல்ல முயன்றிருக்கிறேன்.” என்றார்.

படத்திற்கு அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, அஸ்வத் இசையமைக்கிறார். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் மனு ஆனந்த். இவர் கௌதம் வாசுதேவ் உதவியாளர் என்பதும், நடிகை மஞ்சிமா மோகன் நடிப்பில் கடைசியாக வெளியான‘தேவராட்டம்’ என்ற படத்திலும் அவர் பயிற்சி பெறும் சட்டத்தரணியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.