வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று காலை வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி விஜேயகுணவர்தனவினால் அனுரா அபேயவிக்கிரம உள்ளக பூப்பந்தாட்ட விளையாட்டு அரங்கம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேவிக்கிரமவின் உன்னத திட்டத்தின் கீழ் முன்னாள் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்ந்துவின் வழிகாட்டலின் கீழ் வவுனியா பிராந்திய வேலைப்பகுதி உத்தியோகத்தர்களின் உழைப்பு மூலம் வவுனியா பொலிஸ் கட்டடத் தொகுதியில் நிர்மாணிக்கப்பட்ட அனுர அபேவிக்கிரம உள்ளக விளையாட்டு அரங்கம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாமடுவ தேசிய பாடசாலை மாணவர்களின் நடனத்துடன் வரவேற்பளிக்கப்பட்டு அழைத்துவரப்பட்ட அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாமடுவ விகாராதிபதி, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவிஜேகுனவர்தன, வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபேவிக்கிரம, மடுக்கந்த விஷேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள், வவுனியா பிரதேச செயலாளர், 

கா.உதயராசா, செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்தியர் கு. அகிலேந்திரன், வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி. எம். எஸ். எம். தென்னக்கோன், மன்னார், செட்டிகுளம், ஓமந்தை, புளியங்குளம், கனகராஜன்குளம், நெடுங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், பொலிஸார், உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் இறுதியில் வளாகத்தில் மரக்கன்றுகளும் கலந்துகொண்ட அதிதிகளினால் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.