கடினமான தோல்வி ஏற்பட்ட நிலையிலும் அமைதி, கண்ணியத்தை கடைப்பிடித்தார் என நியூஸிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் கேன் வில்லியம்ஸனுக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இறுதி வரை போராடியும், அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது. இது நியூஸிலாந்து அணி வீரர்களுக்கு கடும் மன வேதனையை ஏற்படுத்தியது. 

இந் நிலையில் இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த ரவிசாஸ்திரி, 

உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி முடிவுகள், அதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களின்போது கண்ணியம், அமைதியை கடைப்பிடித்ததற்காக கேன் வில்லியம்சனின் மன உறுதியை பாராட்டுகிறேன். உலகக் கிண்ணத்தில் உங்களது ஒரு கை இருந்ததை நான் அறிவேன். எனினும் அடுத்து சாதிக்க கடவுளின் ஆசிகள் என குறிப்பிட்டுள்ளார்.