கடந்த சில நாட்­க­ளாக கல­வானை பிர­தே­சத்தின் பல கிரா­மங்­களின் பெண்­களை பாலியல் பலாத்­காரம் செய்ய முயற்­சித்த சந்­தேக நபரொ­ருவர் கல­வான பொலிஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கலவானை பிர­தான பஸ் நிலை­யத்தில் சந்­தே­கத்­திற்­கி­ட­மான முறையில் நட­மா­டிய குறித்த நபரின் கைப்­பொ­தி­யினை பொலிஸார் பரி­சோ­த­னைக்குட்­ப­டுத்­தினர்.

இதன்­போது இறப்­ப­ரினால் செய்­யப்­பட்ட செயற்கை ஆணு­றுப்பு மற்றும் 25 கருத்­தடை சாத­னங்கள் என்­பன கைப்பற்றப்பட்டதாகவும், குறித்த நபர் காலி அக்­குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்­தவர் எனவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

கடந்த சில மாதங்­க­ளாக கல­வானை பிர­தே­சத்தின் பல்­வேறு கிராமங்­க­ளிலும் பல பெண்­களை பாலியல் பலாத்­காரம் செய்ய முயற்­சிக்கும் நப­ரொ­ருவர் கிரா­மங்­களில் உலா­விவ­ரு­தா­கவும்,பெண்­களை பலாத்­காரம் செய்ய முயற்­சிக்கும் வேளையில் அப்­பெண்கள் அச்­சத்தில் சத்­த­மிடும் போது சூட்­சு­ம­மான முறையில் அந்­நபர்  ஓடி மறை­வ­தாக பிர­தே­ச­மெங்கும் தகவல் பரவி­யி­ருந்­தது.

இந்­நி­லை­மையில் சம்­ப­வ­தினம் இந்­நபர் கைதுசெய்­யப்­பட்­ட­வுடன் சந்­தேக நபரை அடை­யாளம் காண்­ப­தற்­காக  உளப் பாதிப்­புக்­குள்­ளான பெண்கள் சிலர் வர­வ­ழைக்­கப்­பட்ட போது, சம்­ப­வங்­க­ளுடன் தொடர்புடைய உரிய நபர் இவர்தான்  என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இந்நபர் குறித்த மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.