வத்தளை பகுதியில் தனியார் சீனத் தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரியும் தனியார் ஹோட்டலொன்றின் கட்டுமானப் பணிகள் இடம்பெற்ற இடத்தை சோதனை செய்த மதுவரித் திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து ஒரு தொகை சீன சிகரெட்டுக்களையும், பியர் டின்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மதுவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் காமினி அதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கொழும்பு மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே வத்தளை, ஹேந்தலை பகுதியில் உள்ள கட்டுமான தளத்திலிருந்து 9,600 சீன சிகரெட்டுக்கள் அடங்கிய பெட்டிகளும், 260 பியர் டின்களும் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த சீன சிற்றுண்டிச்சாலை ஊழியர் ஒருவரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.