அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள அமைந்துள்ள வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பொலிஸ் பிரிவில், கங்காபட மாவத்தையில், மிஹிந்தல வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து பெண் 64 வயதுடைய பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் தலையில இரத்தம் படிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் பிரேத பரிசோதனைக்காக சடலம் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து மரணம் குறித்து விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.