திருமணத்திற்கு பின்னர் ஐந்து ஆறு பெண்களுடன் தனக்கு தொடர்பிருந்ததாக  பாக்கிஸ்தானின் முன்னாள் சகலதுறைவீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொடர்புகள் ஒரு வருட காலத்திற்கு மேல் நீடித்தன என அவர் குறிப்பிட்டள்ளார்.

திருமணத்தின் பின்னர் இவ்வாறான உறவுகளை வைத்திருந்தீர்களா என்ற கேள்விக்கு அப்துல் ரசாக் ஆம் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தியாவின் ஹர்டிக் பண்டயாவை சிறந்த சகலதுறை வீரராக தன்னால் மாற்றமுடியும் என ரசாக் தெரிவித்திருந்தமைக்கு சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பண்ட்யாவிடம் பல பலவீனங்கள் உள்ளன ஐக்கிய அரபு இராச்சியத்தில் அவரிற்கு என்னால் பயிற்சி வழங்க முடியுமென்றால் அவரை மிகச்சிறந்த சகலதுறை வீரராக மாற்றமுடியும் என அப்துல் ரசாக் தெரிவித்திருந்தார்.