நாடளாவிய ரீதியில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது மது போதையில் வாகனம் செலுத்திய 209 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த விஷேட சோதனை நடவடிக்கையில் இது வரையில் 3702 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.