சூடானின்  ஆளும் இரா­ணுவ சபையும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட  எதிர்க்­கட்சித் தலை­வர்­களும்  நேற்று புதன்­கி­ழமை வர­லாற்று முக்­கி­யத்­துவமிக்க அதி­காரப் பகிர்வு உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்­டுள்­ளனர்.

இரவு முழு­வதும் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­க­ளை­ய­டுத்து இந்த உடன்­ப­டிக்கை தொடர்பில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டது. ஆபி­ரிக்க ஒன்­றிய மற்றும் ஐரோப்­பிய மத்­தி­யஸ்­தர்கள் முன்­னி­லையில் மேற்­படி உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திடும் நிகழ்வு இடம்­பெற்­றது.

கடந்த ஏப்ரல் மாதம் ஜனா­தி­பதி ஓமர் பஷீர் ஆட்­சி­யி­லி­ருந்து வெளியேற்­றப்­பட்­டது முதற்­கொண்டு  அந்­நாட்டில்  சிவி­லிய அர­சாங்­க­மொன்றை ஏற்­ப­டுத்த ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் கோரி வரு­கின்ற நிலை­யி­லேயே இந்த நடவடிக்கை  எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­படும் நிகழ்வில் உரை­யாற்­றிய இராணுவ சபையின் பிரதித் தலைவர் மொஹமட் ஹம்டன் ஹெமெதி டக்லோஇ இது இந்­நாட்­டுக்கு வர­லாற்று முக்­கி­யத்­துவமிக்க  தருணம் ஒன்­றா­க­வுள்­ளது எனக்குறிப்­பிட்டார். இரு தரப்­பி­ன­ராலும் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்ள  'அர­சியல் பிர­க­டனம்' என அழைக்­கப்­படும் மேற்­படி ஆவ­ண­மா­னது   இரா­ணுவ சபையும்   எதிர்க்­கட்சி குழு­வி­னரும் சுழற்சி முறையில் நாட்டை ஆளு­வ­தற்­கான திட்­ட­மொன்றை உள்­ள­டக்­கி­யுள்­ள­தாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்­பி­ர­காரம் இராணுவம் முதல் 21 மாதங்களுக்கு ஆட்சி செய்ய தொடர்ந்து  தேர்தல்கள் இடம்பெற்று அடுத்து வரும்  18 மாத காலப் பகுதிக்கு சிவிலிய ஆட்சி இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான அரசியலமைப்பு பிரச்சினை கள் குறித்த இரண்டாவது உடன்படிக்கை சம்பந்தமாக நாளை வெள்ளிக்கிழமை முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.