கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை  18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வவடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன் படி நாளை காலை 8.00  மணிமுதல் இவ்வாறு 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

பேலியகொட, வத்தளை, கட்டுநாயக்க சீதுவ, ஜா- எல, பியகம,மகர, தொம்பே, களனிய மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 அவசர திருத்தப்பணிகள் காரணமாகவே  குறித்த நீர்வெட்டு  அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.