அமெரிக்காவில் நான் தொடுத்த வழக்கிற்கும் இலங்கை தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - லசந்தவின் மகள்

Published By: Priyatharshan

18 Jul, 2019 | 11:25 AM
image

தனது தந்தையாரான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிற்கு தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி அமெரிக்காவின் மத்திய கலிபோர்னியாவில் மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தன்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கும் இலங்கையில் நடத்தப்படக் கூடிய எந்தவொரு தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இலங்கையில் இதுவரை எந்த தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எந்தவொரு கட்சியும் ஜனாதிபதி வேட்பாளரை இதுவரையில் அறிவிக்கவுமில்லை என்றும் அவரது மகள் அகிம்சா விக்கிரமதுங்க கூறியிருக்கிறார்.

பத்திரிகையொன்றுக்கு நேற்று புதன்கிழமை பிரத்தியேக பேட்டியொன்றை அளித்திருக்கும் அகிம்சா, கோதாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக வருவதை தடுப்பதற்கான அரசியல் நோக்கத்துடனேயே அமெரிக்காவில் வழக்கு தொடுத்திருப்பதாக கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தன்னால் கலிபோர்னியாவில் வழக்கு தொடுக்கப்பட்டதன் பின்னரே கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிப்பை செய்தார். 

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களைப் பயன்படுத்தி தனது பிரசாரங்களை முன்னெடுப்பது பொருத்தமானது என்று கூட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நினைத்தார். எனக்கு தெரிந்தவரை அவரை வேட்பாளராக எந்த கட்சியும் அறிவிக்கவில்லை என்றும் 2009 ஜனவரியில் கொடூரமாக கொல்லப்பட்டதாக விக்கிரமதுங்கவின் மகள் கூறியிருக்கிறார்.

இலங்கையில் வழக்கை தாக்கல் செய்யாமல் அமெரிக்காவில் தாக்கல் செய்ததின் காரணங்கள் எவை என்று அகிம்சாவிடம் கேட்ட போது, இலங்கை நீதிமன்றங்களில் கோத்தாபய தனித்துவமான விலக்கீட்டு உரிமையை அனுபவிக்கிறார் போன்று தெரிகிறது. பல ஊழல் விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளில் அவர் கைது செய்யப்படுவதை தடுத்து குற்றவியல் விசாரணைகளையும் நிறுத்தியதன் மூலம் நூற்றாண்டுக்கும் அதிகமான கால பாரம்பரியத்தை இலங்கை நீதித்துறை மீறிவிட்டது.

கோதாபய சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதியான விசாரணையை இலங்கையில் எதிர்பார்ப்பது பயனற்றது என்றே நான் நம்புகிறேன் என்று அவர் பதிலளித்திருக்கிறார்.

கோதாபய மீதான வழக்கிற்கு அரசியல் சாயம் பூசுவது ஏன் வசதியாக இருக்கின்றது என்பதை என்னால் விலங்கிக் கொள்ள கூடியதாக இருக்கிறது. எனது தந்தையின் மரணத்திற்கு பொறுப்பானவர் என்று நான் நம்புகின்ற நபர் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் நீதியை பெறுவது சாத்தியமில்லை என்ற எனது நிலைப்பாட்டை பலப்படுத்துவதாகவே அது அமையும். எனது நடவடிக்கையால் தாங்கள் விரும்புகின்ற வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் ஏதோ சில வழிகளில் பாதிக்கப்படக் கூடும் என்று சிலர் கவலைக் கெண்டுள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன்.

மஹிந்த ராஜபக்ஷவை தவிர வேறு எவராவது இலங்கையின் ஜனாதிபதியாக வருவது என்ற யோசனை கூட ஒரு சில வருடங்களுக்கு முன்னர் தோன்றிய புதியதொரு சாத்தியப்பாடாகும். இப்போது 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக எனது குடும்பமும் நானும் பல்வேறு சட்ட நிறுவனங்கள் உட்பட சகல வகையான அதிகாரிகளையும் சந்தித்து பேசி அவர்களது உதவியின் மூலம் நீதியை பெறுவதற்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா என்பது குறித்து முயற்சித்துக் கொண்டே வருகின்றோம். அது நீண்ட தேடலாகவே இருக்கிறது என்று அகிம்சா கூறியிருக்கிறார்.

கேள்வி : 2015 தேர்தல்களில் உங்களது தந்தையாரின் கொலை முக்கியமான ஒரு பிரசார சுலோகமாக இருந்தது. அந்த தேர்தலுக்கு பிறகு கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்தும் விலகவேண்டி ஏற்பட்டது. பதவிக்கு வந்த அரசாங்கத்திற்கும் லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கில் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை இல்லை என்று நீங்கள் உணர்கிறீர்களா?

பதில் : இந்த கொலையை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள் அசாதாரணமான துணிச்சலை வெளிக்காட்டினார்கள் உண்மையை வெளிக் கொணர்ந்து வழக்கை பூரணப்படுத்துவதில் அவர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கினார்கள். அவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து போராடவில்லை, அரசாங்கத்துடன் போராடுகிறார்கள் என்பதை அடிக்கடி நான் உணர்ந்தேன்.அரசாங்கத்தின் பல நிறுவனங்கள் கொலையை விசாரணை செய்த விசாரணையாளர்களுக்கு தேவையான சான்றுகளை வழங்க மறுத்திருந்தன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனது தந்தையாரின் நெறுங்கிய நண்பர்களில் ஒருவர். இராஜதந்திர விலக்கீட்டு உரிமையை கோதாபய ராஜபக்ஷ கோருவதற்கான வழிகளை தேடுவதன் மூலமாக இந்த வழக்கில் குற்றப்பழியிலிருந்து அவரை விடுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா?

மறுபுறத்திலே அதிர்ஷ்ட வசமாக ஜனாதிபதி மற்றும் முக்கியமான அமைச்சர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவர்கள் குறைந்த பட்சம் இப்போதாவது நீதியை விரும்புகிறார்கள் போல் தெரிகின்றது.

கேள்வி : நீங்கள் அமெரிக்காவில் தொடுத்த வழக்கு வெற்றி பெறாமல் போகக் கூடும் என்றும் உங்களது தந்தையாரின் கொலைக்கு கோதாபய ராஜபக்ஷ ஒரு போதுமே கிறிமினல் பொறுப்புக் கூறலைக்கப்படாமல் போகலாம் என்றும் கவலைப்படுகிறீர்களா?

பதில் : அரசியல அனுகூலத்துக்காக ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கு முன்னுரிமை கொடுக்க கூடிய ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கையில் என்றாவது ஒரு நாள் தெரிவு செய்யப்படுவார்கள் என நான் நம்புகிறேன். அத்தகைய நேரம் வரும் வரை சுயாதீனமான நியாயாதிக்கமொன்றில் சிவில் நடவடிக்கைகயை முன்னெடுப்பதே நீதியான விசாரணைக்கு எமக்கு இருகக்கூடிய ஒரே வாய்ப்பாகும்.

கேள்வி : கலிபோர்னியாவில் நீங்கள் தொடுத்த வழக்கு வெற்றிகரமான முடிவைக் எட்டுமேயானால் , இந்த வழக்கின் சான்றுகளின்; அடிப்படையில் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்காக குற்றவியல் வழக்கை தொடர்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் தனது சொந்த பிரஜையை பொறுப்புக்கூற வைக்குமா?

பதில் : எனது தந்தையாரின் கொலையுடன் கோதாபய ராஜபக்ஷவிற்கு இருக்கக்கூடிய தொடர்பு பற்றி நீதிமன்றத்தில் தீர்க்கமான சான்றுகளை நாம் முன்வைப்போம். அதற்கு பின்னர் குற்றவியல் செயன்முறைகள் தொடங்கும். குற்றவியல் விசாரணைக்கான சரியான இடம் இலங்கைதான். ஆனால் அமெரிக்க அரசாங்கம் அதன் சட்டங்களின் கீழ் அத்தகைய குற்றச் சாட்டுகள் பொருத்தமானவை என்று பரிசீலிக்கும் என நான் நம்புகிறேன்.

கேள்வி : நீங்கள் தொடுத்திருக்கும் வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்தால் நஷ்ட ஈடுகளை கோதாபயவிடமிருந்து கோரமுடியும். அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. அந்த நாட்டில் அவரது சொத்துக்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா?

பதில் : எனது தந்தையார் கொல்லப்பட்ட நேரத்தில் கோதாபய ராஜபக்ஷவின் சொத்துகள் குறித்து விசாரணைகள் மேற்கொண்டிருந்தார். லொஸ் ஏஞ்சசில் உள்ள வீடொன்றை 2006 ஆம் ஆண்டில் பௌத்த பிக்கு ஒருவருக்கு கொள்வனவு விலையில் மூன்று மடங்கு அதிக விலைக்கு அவர் விற்பனை செய்ததை தந்தையார் கண்டுப்பிடித்தார். நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்வதால் அவரது சொத்துகளின் தற்போதைய நிலைப்பற்றி நான் இதுவரை அறிந்தவற்றை கூறமுடியாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11