இங்கிலாந்தில் இலங்கை தேயிலையின் விலை உயர்ந்த தேநீர்

Published By: Digital Desk 3

18 Jul, 2019 | 11:33 AM
image

இலங்கையில் இருந்து சிறப்பான முறையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையினால் தயாரிக்கப்படும் ஒரு கப் தேநீர் இங்கிலாந்தில் 200 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் இலங்கை மதிப்பு கிட்டத்தட்ட 35 ஆயிரத்து 100 ரூபாவென தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிலாந்தின்  பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எதிரே " தி ரூபென்ஸ் " என்ற ஹோட்டல் ஒன்றிலேயே இந்த விலை உயர்ந்த தேநீர் விற்பனை செய்யப்படுகிறது.

கோல்டன் டிப்ஸ் எனும் இலங்கையில் இருந்து சிறப்பான முறையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைகள் அங்கு கிடைக்கப் பெறுகின்றன.

இந்த தேயிலைகள் வெல்வெட் துணியில் உலர்த்தப்படுகின்றன. இந்த ஹோட்டலுக்கு மட்டுமே பிரத்தியேகமாக இந்த தேயிலைகள் அனுப்பப்படுவதால் அங்கு அதிக விலைக்கு தேநீர் விற்பனை செய்யப்படுகிறது.

பக்கிங்ஹாம்  அரண்மனையை ரசித்தபடி ஹோட்டலுக்குள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு வெள்ளிப் பாத்திரத்தில் தேநீர் பரிமாறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவுக்கு செல்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் 

2026-05-17 13:13:24
news-image

"உலகளாவிய நெருக்கடிகள் பல தசாப்த கால...

2026-05-17 12:35:57
news-image

எபோலா பரவல் சர்வதேச அவசரநிலையாக பிரகடனம்:...

2026-05-17 11:12:15
news-image

இத்தாலியில் பாதசாரிகள் மீது மோதியது கார்:...

2026-05-17 10:35:15
news-image

அ.தி.மு.க.,வை இணைக்க ரஜினி முயற்சி? -...

2026-05-16 18:28:21
news-image

கொங்கோவில் தீவிரமாகப் பரவும் எபோலா வைரஸ்...

2026-05-16 14:15:56
news-image

மாலைதீவில் சோகம் : கடலுக்கடியில் உள்ள...

2026-05-16 19:46:39
news-image

மியன்மாரில் நிலநடுக்கம்!

2026-05-16 19:36:35
news-image

அமெரிக்கா - ஈரான் மோதல் அச்சம்...

2026-05-16 13:55:22
news-image

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர்...

2026-05-16 11:46:56
news-image

சீன ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை : தாய்வான்...

2026-05-16 19:46:10
news-image

லெபனான் - இஸ்ரேல் போர்நிறுத்தம் மேலும்...

2026-05-16 09:58:42