இலங்கை தொழில்நுட்ப யுகம் என்னும் தொனிப்பொருளிலான சில்பசேனா கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி வரை இந்த கண்காட்சி இடம்பெறவுள்ளது. கண்காட்சி கூடத்தில் தொழில்நுட்பம், புதிய உற்பத்திகள், நீலப் பச்சை பொருளாதாரம், கல்வித்துறை வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கண்காட்சி தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் சுஜீவ சேனசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.