மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் ஈடுபட்டு வருகிறது.

இலங்கையில் மீனவர்களின் உரிமையை பாதுகாத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செயற்பட்டுவரும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினர் மட்டக்களப்பில் பல விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரோட்டிகளை பல இடங்களிலும் ஒட்டியுள்ளனர்.