(இராஜதுரை ஹஷான்)

கிழக்கு மாகாணத்தில் சேவையாற்றும் பொலிஸார் தமது பொறுப்புக்களை முறையாக பின்பற்றாமையின் காரணமாகவே அங்கு இஸ்லாமிய  அடிப்படைவாதம் தலைதோங்கியது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடமையில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் ,

கொழும்பில்  தேசிய நல்லிணக்கம் தொடர்பில் கருத்துரைக்கும் ஒரு சில கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு அங்கு அடிதளமிடுகின்றார்கள். முறையற்ற செயற்பாடுகளை மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண அரசியல்வாதிகளுக்கு எதிராக அனைத்து சாட்சியங்களையும் விரைவில் நாட்டு மக்களிடம் பகிரங்கப்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.