(எம்.மனோசித்ரா)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அத்திவாரத்தியிலேயே இன்று அரசாங்கம் இயங்குகின்றது.எனவே இதனைப் பயன்படுத்திக் கொண்டு கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களில் சாதகமான தீர்வொன்றை பெற்றுக் கொள்ள வேண்டும்  என்று பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

வெலிக்கட சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவரை இன்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.