தமிழினத்தை மதங்களை கடந்து ஓர் இனமாக ஒன்றுபடுத்தி கன்னியா மீட்புக்கான கண்டனப் போராட்டத்தை அகிம்சை வழியில் வழி நடாத்திய தென் கையிலை ஆதின முதல்வர் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் விகாரை அமைப்பதை தவிர்க்குமாறு தெரிவித்து தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆன்மீகவாதியான வணக்கத்துக்குரிய தென் கையிலை ஆதீனத்தின் அகத்தியர் அடிகளார் மீது தேநீரால் ஊற்றப்பட்ட கடும் போக்கு தன்மை வன்மையாக கண்டிக்கவும் தண்டிக்கப்பட வேண்டியது என மக்களுடனான சந்திப்பின் போது ஊடகங்களுக்கு  இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

மதத்தினாலும் கலாச்சாரத்தினாலும் ஒன்று என கூறுபவர்கள் இவ்வாறன கபடத்தனமானவர்களின் செயற்பாடுகள் காரணமாக எமது இலக்கு நோக்கிய பயணங்கள் சிதைவுறுத்தப்படுகின்றது. அதே போன்று எமது கலை கலாச்சாரங்களை மருவி இன்னொன்றை புத்துருவாக்கி கொள்வது உயிரோட்டமான ஆசீர்வாதத்தை வழங்காது என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையை ஆண்ட இராவணேஸ்வரன் தனது தாயாருக்கு இறுதி கிரியைகளை செய்வதற்காக கன்னியா நீர் ஊற்றை உருவாக்கியதாக நம்பிக்கை காணப்படுகிறது எனவே அவ்வாறன புண்ணிய பூமியில் அகிம்சை வழியில் போராட்டத்தை இணைந்து முன்னெடுத்த அகத்தியர் அடிகளார் மீது தேநீரால் ஊற்றிய காடையர்கள் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்த காவல் துறையினரின் செயல் சாபகேடுக்குரியது. அதன் விமோசனம் வலிகளை அறிந்து உரிய வழிகளை தோற்றுவித்தாலே அன்றி பிரதிபலிப்புக்கள் அபரீதமானதாகவே இருக்க செய்யும்.

மோதலின் மூலம் படிநிலையான மாற்றங்கள் இடம்பெற வேண்டுமே தவிர அதல பாதாளத்திற்குள் அனைவரையும் இட்டு செல்வதாக அமைய கூடாது. மோதலின் பிரதிபலிப்புக்களை உரிய முறையில் ஆராயப்பட்டு முறையான விம்பங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும் எனவும், 

போராட்டங்களின் மூலம் தீர்வுகள் கிடைக்கப்பெற வேண்டும் எனவும் போராட்டங்களை ஆதரிக்கின்றோம் எனவும் உரியவாறு நடைமுறைகள் பின்பற்றப்படாமல் இருக்குமானால் முழுமையான போராட்டத்தை முன்னெடுக்கவும் தயங்கபோவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.