(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரான் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றுக்கு முன்வைத்துள்ள  முதல் பீ அறிக்கை சட்ட விரோதமானது என, கஞ்சிபானை இம்ரானின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் கஞ்சிபானை இம்ரானின் சட்டத்தரணி முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் மன்றுக்கு விளக்கமளிக்க சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக  உத்தரவிடப்பட்டுள்ளது.  

கொழும்பு மேலதிக இந்த உத்தரவு இன்று பிறப்பித்தார்.

சந்தேக நபரான கஞ்சிபானை இம்ரான் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வலியத்த முன்வைத்த வாதங்களை ஏற்றே கொழும்பு மேலதிக நீதிவான், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு இந்த உத்தரவை பிறப்பித்தார்.