(எம்.மனோசித்ரா)

தேர்தல்கள் நெருங்குவதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று மீண்டும் அந்த மக்களின் பொய் வாக்குறுதியையே வழங்கியுள்ளார் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்துடன் இந்த வாக்குறுதிகளுக்கு ஏமாறாமல் தமிழ் மக்கள் விழிப்புணர்வுடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டடு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.