ஊழியர்களின் பகிஷ்கரிப்பால் தபால் சேவை பாதிப்பு

Published By: Vishnu

17 Jul, 2019 | 03:54 PM
image

(எம்.மனோசித்ரா)

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தினால் கொழும்பில் தபால் பரிமாற்றம் செய்யும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்து நேற்று மாலை 4 மணிமுதல் இந்த வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நாளை மாலை 4 மணிவரை ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் தமது போராட்டத்தை தொடரப்போவதாகும் தெரிவித்துள்ளனர். 

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அமைச்சரவையில சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இவர்களுக்கு அறிவிக்கப்பட்டபோதிலும் வேலை நிறுத்தம் தொடர்வதாகவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கடந்த வருடம் ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை அடுத்து, அரசினால் கடந்த செப்டெம்பர் மாதம் அமைச்சரவைக்கு சில பரிந்துரைகளை முன்வைக்கப்பட்டன. எனினும், அது குறித்து அமைச்சரவை இதற்கான அனுமதியை இதுவரை வழங்கவில்லை . 

இதனால் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று தமது கோரிக்கைகளுக்கான தீர்வைப் பெற்றுத்தருமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ள தொழிற்சங்கத்தினர், அரசாங்கம் எமது அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் பாரா முகமாக செயற்பட்டால் எதிர்வரும் நாட்களில் அனைத்து ஊழியர்களையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கும் தயாராக உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47