அமெரிக்க தலைநகர் வொசிங்டனில் மத சுதந்திரம் பற்றியதான அமெரிக்க இராஜாங்க திணைக்கள மாநாட்டில் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் பற்றிய கவலை வெளியிடப்பட்டது. 

இம் மாநாட்டை அமெரிக்க இராஜாங்க திணைக்கள செயலாளர் மைக் பம்பியோ ஆரம்பித்து வைத்தார். 

இம் மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

இம் மாநாட்டின் ஆரம்பதினமான நேற்று இலங்கையின் தேசிய கிறிஸ்த்தவ இவான்ஜெலிக்கல் கூட்டமைப்பின் சட்ட மற்றும் வழக்காடல் தலைவி யாமினி ரவிந்திரன் உரையாற்றினார். இவர் இலங்கையில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதன் பின்னரான நிகழ்வுகள் பற்றிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.