(செ.தேன்மொழி)

அனுராதபுரம் பகுதியில் லொறியுடன் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவர்கள் இருவர் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.

அனுராதபுரம் - சாவஸ்திபுர - ரத்மலை பகுதியில் நேற்று மாலை யாத்திரை சென்று வந்த வேன் ஒன்று லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது கிரிந்த பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் உட்பட 15 பேர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.