(செ.தேன்மொழி)

லுனுகம்வேஹர பகுதியில் காட்டு யானை தாக்கியதில ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 48 வயதுடைய சரத் சூரிய பிரேமச்சந்ர என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இவர் சேனை பயிர்ச் செய்கையில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போதே காட்டுயானையின் தாக்குதலுக்கிலக்காகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவயந்துள்ளது.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக தெம்பரவௌ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.