யாழ்ப்பாணம் மாநகர சபை தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி சுகாதாரத் தொழிலாளர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

Image result for யாழ். மாநகர சபை

இதனால் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகள் அகற்றப்படாது, குப்பைகள் தேங்கியுள்ளன. 

கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாண மாநகர சபையின் மேற்பார்வையாளர் ஒருவருக்கும், தொழிற்சங்க தலைவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு கைகலப்பாக மாறியது.

அதனால் தொழிற்சங்கத் தலைவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சம்பவத்தையடுத்து தொழிற்சங்க தலைவருக்கு, மாநகர சபை ஆணையாளரினால் பணி இடைநீக்க கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தியும், மாநகர சபை ஆணையாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பணி இடைநீக்க கடித்தினை மாநகரர சபை ஆணையாளர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார தொழிலாளர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் யாழ்ப்பாணம் மாநகர கழிவகற்றல் செயற்பாடுகள் முடங்கிப் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.