(செ.தேன்மொழி)

பொகவந்தலாவை பகுதியில் அனுமதியின்றி மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொகவந்தலாவை - கெசல்கமுவ ஓயாவில் நேற்றிரவு சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலங்கொட, பின்னவல மற்றும் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த 35-47 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். 

இவர்களிடமிருந்து மாணிக்க கல் அகழ்வுக்காக பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.