கன்­னியா வெந்­நீ­ருற்­றுப் ­ப­குதி   வளா­கத்­தி­லுள்ள பழைமை வாய்ந்த பிள்­ளையார் ஆல­யத்தை  இடித்து பௌத்த தாது கோபுரம்    அமைக்கும் முயற்­சிக்கு எதி­ராக தென்­க­யிலை ஆதீன அடி­களார் குரு­மு­தல்வர் அகத்­திய அடி­க­ளாரின் தலை­மையில் நேற்று நடத்­தப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்­தின்­போது பதற்­ற­மான  நிலை ஏற்­பட்­ட­துடன் ஆர்ப்­பாட்­டத்­துக்கு பொலிஸார் தடையும் விதித்­தனர். 

அத்­துடன் ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­ப­டக்­கூ­டாது என  பெரும்­பான்­மை­யின மக்கள் அச்­சு­றுத்தும் தொனியில் தெரி­வித்­த­தை­ய­டுத்து  தென்­க­யிலை ஆதீன அடி­களார் குரு­மு­தல்வர் அகத்­திய அடிகளாரின் கோரிக்­கை­யை­ய­டுத்து  நிலைமை  கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டது.  

இதன்­போது பொது மக்­க­ளுக்கும் பொலிசா­ருக்கும் இடையில் கடும் வாக்­கு­வாதம் இடம்­பெற்­ற­துடன்    உள்ளே நுழைந்தால் சுடு தேநீரை ஊற்றி கொல்வோம் என பெரும்­பான்­மை­யினர் சிலர்   கன்­னியா குரு முதல்வர் அகத்­திய அடி­க­ளா­ரை­யும் தர்ம கர்த்­தா­வையும் அச்­சு­றுத்­தி­ய­தா­கவும்  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 கன்­னியா வெந்­நீ­ருற்­றுப்­ப­கு­தியை பௌத்த மய­மாக்­கவும் இவ்­வா­ள­கத்­தி­லுள்ள பழமை வாய்ந்த பிள்­ளையார் ஆல­யத்தை இடித்து பௌத்த தாது கோபுரம்  ஒன்று அமைக்கும் முயற்­சிக்கு எதி­ராக தென்­க­யிலை ஆதீன அடி­களார் குரு­மு­தல்வர் அகத்­திய அடி­க­ளாரின் தலை­மையில் கன்­னியா மர­பு­ரிமை அமைப்பு இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த அமை­தி­வழி கவ­ன­யீர்ப்பு போராட்டம் நேற்று நடை­பெற்­றது.     

2000 மேற்­பட்ட இளை­ஞர்கள் யுவ­திகள் புத்­தி­ஜீ­விகள் பொது மக்கள் சுமார் 10 மணி­ளவில்  ஒன்று கூடி­யி­ருந்­தனர். அவர்கள் கன்­னியா பிர­தான வீதியில் ஒன்று கூட­வேண்­டி­ய­நிலை ஏற்­பட்­டது.  போராட்டம் ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பே கன்­னியா பிர­தான வீதியில் இரா­ணு­வமும் பொலீ­ஸாரும் குவிக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் கன்­னியா நீரூற்­றுக்கு செல்லும் வழியும் தடைகள் போட்டு  பொலிஸ் மற்றும் இரா­ணு­வத்தின் பலத்த பாதுகாப்பு  இடப்­பட்­டி­ருந்­தது. 

  இதற்கு இடையில் கன்­னியா வெந்­நீ­ரூற்­றுக்கு செல்லும் பிர­தான நுழை­வாயில் அடைக்­கப்­பட்டு பொது­மக்கள் செல்­லா­த­வாறு பொலிசார் ­காவல் காத்து நின்­ற­துடன் நீரூற்று வளா­கப்­ப­கு­தி­யிலும் பெருந்­தொ­கை­யான பொலிசார் குவிக்­கப்­பட்­டி­ருந்­தனர் .

10 மணி­ய­ளவில் 2000 க்கும் மேற்­பட்ட மக்கள் ஒன்­று­கூடி பிர­தான வீதி­யி­லி­ருந்து கன்­னியா வெந்­நீ­ரூற்­றுக்கு   அமை­தி­யான முறையில் செல்ல முற்­பட்­டனர் அவ்­வேளையில் பொலிசார் தடை­களையிட்டு கன்­னி­யா­வுக்குள் செல்­வ­தற்கு    அனு­ம­தி­யில்லை என்றும் இதற்­கான தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்றும்  தெரி­வித்­த­துடன் உப்­பு­வெளி பொலிஸ்­நி­லைய பொறுப்­ப­தி­காரி தடை­யுத்­த­ர­வுப்­பத்­தி­ரத்தை தலைமை தாங்­கிச்­சென்ற ஆதீன குரு­மு­தல்­வ­ரிடம் காண்­பித்தார் .

 இத­ன­ட­போது ஆதீன குரு­மு­தல்வார் நாம் ஆப்­பாட்டம் செய்­யவோ அல்­லது யுத்தம் செய்­யவே வர­வில்லை அமை­தி­யான முறையில்  கன்­னியா பிள்­ளையார் ஆல­யத்தை வழி­பட அனு­மதி தாருங்கள் என கோரிக்கை விடுத்தார்.  எனினும் அவரின் கோரிக்கை  அதி­கா­ரியால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இத­னை­ய­டுத்து வந்­தி­ருந்த மக்­க­ளுக்கும் பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கும் இடையில் வாக்­கு­வாதம் நிகழ்ந்­தது. 

அதைத்­தொ­டர்ந்து கன்­னியா குரு­மு­தல்வர் அகத்­திகள் அடி­களார் மற்றும் கன்­னியா பிள்­ளையார் ஆலய தருமகர்த்தா ஆகிய இரு­வ­ருக்கு மட்டும் ஆலய வளா­கத்­துக்கு செல்ல அனு­ம­தி­வ­ழங்­கப்­பட்ட நிலையில் பொலிசார் பிர­தான வீதி­யி­லி­ருந்து சுமார் 500 மீற்றர் தொலை­வி­லுள்ள வெந்­நீ­ரூற்­றுப்­கு­திக்கு இரு­வ­ரையும் அழைத்து சென்­றனர். 

அப்­போது பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு முன்­பா­கவே  உள்ளே நுழைந்தால் சுடு தேநீரை ஊற்றி கொல்­லுவோம் என பெரும்­பான்­மை­யின மக்கள்  கன்­னியா குரு முதல்வர் அகத்­திய அடி­க­ளா­ரை­யும் தர்ம கர்த்­தா­வையும் அச்­சு­றுத்­தி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  இந்­நி­லையில் கன்­னியா வெந்­நீ­ரூற்­றுக்கு முன்­பி­ருந்த தமிழ் வர்த்­த­கர்கள் கடை­க­ளை­பூட்டி சென்­றுள்­ளனர். ஏனைய இனத்­த­வர்­க­ளது கடைகள் திறந்­தி­ருந்த நிலையில் இக்­க­டைக்கு வெளியே நூற்­றுக்­க­ணக்­கான  பெரும்­பான்­மை­யின மக்கள் கூடி­யி­ருந்­தனர். 

   தென்­க­யிலை சுவா­மி­களும் தர்ம கர்த்­தாவும் தமக்கு நேர்ந்த அவ­மா­னத்தை பொலிஸ் ; அதி­கா­ரி­க­ளுக்கு முறை­யிட்டும் அவர்கள் பொறுப்­பெ­டுக்­க­வில்லை. முறைப்­பாடு செய்தால் மாத்­தி­ரமே சம்­மந்­தப்­பட்­ட­வர்­களை கைது செய்ய முடி­யு­மென கூறினர். இச்­சம்­ப­வத்­தினால் நிலமை கட்­டுக்­க­டங்­காது; போன நிலையில் பொது மக்­க­ளுக்கும் பொலீ­சா­ருக்கும் இடையில் கடும் வாக்­கு­வாதம் இடம்­பெற்­றது.  நிலைமை கட்­டு­மீற இருந்த நிலையில்  ஆதீ­னத்தின் கௌர­வத்தை காப்­பாற்­றுங்கள் வன்­ந­டத்­தைகள் வேண்­டா­மென சுவாமி கோரிக்கை விடுத்தார். இத­னை­ய­டுத்து நிலை­மைக்கு கட்­டுப்­பாட்­டுக்குள் வந்­தது. 

இச்­சந்­தர்ப்­பத்தில் யாழி­லி­ருந்து வருகை தந்­தி­ருந்த  சின்­மயா மிஷன் சுவா­மி­களும் உட­னி­ருந்து நில­மை­களை கட்­டுப்­பாட்­டுக்கு கொண்­டு­வர முயற்­சி­களை மேற்­கொண்­ட­துடன்  கூடி­யி­ருந்­த­வர்கள் முன்னர் உரை­யாற்­றினார்.  அவர்­த­னது உரையில் தமிழ் மக்­க­ளு­டைய தொன்­மங்­களும் மர­பு­ரி­மை­களும் பாது­காக்­கப்­ப­ட­வேண்­டு­மென வின­ய­மாக வேண்­டினார்.

 கடந்த வாரம் ஜனா­தி­பதி அலு­வ­லகம் கன்­னியா வெந்­நீ­ரூற்று பகு­தியில் பௌத்த தாது கோபு­ரத்தை அமைக்­கும்­படி  தொல்­பொருள் திணைக்­க­ளத்­துக்கு ஆணை­பி­றப்­பித்­தி­ருந்த நிலையில் தொல் பொருள் திணைக்­கள பணிப்­பாளர் நாயகம் பேரா­சி­ரியர் மண்­டா­வெல 6..6..2019 திக­தி­யிட்ட கடிதம் மூலம் திரு­கோ­ண­மலை அரச அதி­ப­ருக்கு ஒரு கட்­டளை பிறப்­பி­ருந்­ததார். 

அர­சியல் தலை­யீடோ அல்­லது எந்த தலை­யீ­டு­களோ  ஏற்­பட்­டாலும் அதை கவ­னத்தில் கொள்­ளாது; பிள்­ளையார் ஆலயம் இருந்­த­வி­டத்தில் பௌத்த தாது கோபு­ரத்தை அமைக்கும் படி வழங்­கிய கட்­ட­ளைக்கு அமைய  தொல் பொருள் திணைக்­க­ளத்தின் அனு­ம­தி­யுடன் பிள்­ளையார் ஆலயம் அமைந்­தி­ருந்த இடத்தில் பௌத்த தாது கோபுரம் அமைக்கும் முயற்சி கடந்த வாரம் முன்­னெ­டுக்ப்­பட்ட நிலை­யி­லையே மேற்­படி கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

 இக்­க­வ­ன­யீர்ப்பு போராட்­டத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்­பினர் ஸ்ரீதரன் மற்­றும் தமிழ்­தே­சிய மக்கள் முன்­னணி தலைவர்; கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் திரு­கோ­ண­மலை நகர சபை உப்­பு­வெ­ளி­பி­ர­தேச சபை உறுப்­பி­னர்­களும் கலந்­து­கொண்டு தமது ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தனர். 

இறு­தி­யாக தென்­க­யிலை ஆதீன குரு முதல்வர் அகத்­திய அடி­களார் ஊடக அறிக்கையொன்றை கூடி­யி­ருந்­த­வர்கள் முன்  வாசித்தார். அவ்­வ­றிக்­கையில்   கன்­னியா வெந்­நீ­ரூற்று பிள்­ளையார் கோவில் வர­லாறு கிழக்கு வாழ் தமிழ் மக்­களின்  இருப்­புக்கு மட்­டு­மல்ல ஒட்­டு­மொத்த தமி­ழின இருப்­புக்கும் மிக அவ­சி­ய­மா­னது. சிங்­கள பௌத்த அர­சா­னது. தமிழர் வர­லாற்றை மகா­வம்ச வர­லா­றாக திரிபு படுத்த  முயற்­சிக்­கின்­றது. இதை தமி­ழர்­தா­ய­கத்தில் பல்­வேறு திணைக்­க­ளங்­களின் ஊடாக நடை­மு­றைப்­ப­டுத்­தி­வ­ரு­கி­றது.

சிங்­கள பௌத்த மய­மாக்­கலில் சைவ ஆல­யங்கள் பாதிக்­கப்­ப­டு­வது யாவரும் அறிந்­த­வி­டயம். வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் சிங்­கள பௌத்த மய­மாக்கம் மிக பாரிய அளவில் நடை­பெற்று வரு­கி­றது. குறிப்­பாக முள்ளி வாய்க்கால் தளத்தில் வீரி­ய­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கிற நிலையில் அது தொடர்­பான எதிர்­வினை நேர்­மை­யான கூட்டு தந்திரோபாய நகர்வுகள் தமிழ் அரச தரப்பிலோ அல்லது; தமிழ் சிவில் அமைப்புக்களிடையையோ இருப்பதாக தெரியவில்லை .

  கன்னியா பிள்ளையார் ஆலயம் தொடர்பில் பல தரப்பினரிடமும் பேசியுள்ளோம்.  பல தளங்களில் வெளிப்படுத்தியுள்ளோம் .  ஆனால் இதுவரைக்கும் அசமந்த போக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவது தொடர்பில் நாம் சந்தேகம் கொள்கிறோம்.  இனியும் இவ்வாறான நிலைமை தொடருமென்றால் மக்கள்மயப்பட்ட வன்முறையற்ற தொடர்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.

எமது போராட்டங்கள்தான் தீர்வாக அமையுமென்றால் அந்த வன்முறையற்ற அமைதிவழிப்போராட்டங்களுக்கு  நாம் செய்ய ஆயத்தமாக வேண்டும் .நாங்கள்; வேறு இன மத மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர். இருந்த போதிலும் தமிழின இருப்பை உறுதிப்படுத்துவதோடு இலங்கையின் பல்லினத்தன்மையையும் தொடாந்து பேணுவதற்கு அரசு உறுதி செய்யவேண்டும் என்றார்.