கோதுமை மா உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரிப்பது குறித்து அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இன்று தீர்மானம் மேற்கொள்ளவுள்ளது.

கோதுமை மா கிலோ ஒன்றின் விலை நேற்றிலிருந்து 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானத்தை அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இன்று மேற்கொள்ளவுள்ளது.

இது குறித்து தெரிவித்த அச் சங்கத்தின் உப தலைவர் ரின்சி விதானகே குறிப்பிடுகையில்,

கோதுமை மா விலை அதிகரிப்பு தொடர்பில் எமக்கு உத்தியோகபூர்வமாக எதுவித அறிவத்தல்களும் வழங்கப்படவில்லை எனவும் அவ்வாறு கிடைக்கப் பெறும் பட்சத்தில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைந்தது 5 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.