சிறுநீரகத்தில் கல் என்று அனைவரும் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆண்களுக்கு 40 வயதிற்கு மேலும், பெண்களுக்கு 50 வயதிற்கு மேலும் சிறுநீரக கல்லடைப்பு தோன்றுகிறது. சிறுநீரகத்தில் கழிவு நீருடன் சோடியம், யூரியா, கால்சியம், ஒக்சலேட் போன்ற தாதுக் கழிவுகள் உண்டு. சீரான உணவுப் பழக்கம் இல்லாதவர்களுக்கும், போதுமான தண்ணீர் அருந்தாதவர்களுக்கும் இவை நாளடைவில் உறைந்து கெட்டிப்படுவதால் கல்லடைப்பு உருவாகிறது. அடிவயிற்றில் தீராத வலியுடன் சிறுநீரில் ரத்தம் கலந்து போதல், மூச்சுத் திணறல், வாந்தி, சிறுநீர் கழிப்பதில் சிரமநிலை, சிறுநீர்ப் பாதையில் முள் செருகியது போன்ற வலி எடுத்தல், சொட்டுச் சொட்டாக நீர் வெளியேறுதல் ஆகியவை இதன் அறிகுறிகள்.

சிறுநீரகக் கல்லடைப்பு முற்றியிருந்தாலும் தற்போதைய நவீன சிகிச்சை முறைகள் மூலம் குணப்படுத்த முடியும். நோயாளியை ‘எக்ஸ்ட்ரா கார்ப்பொரல் லித்தோட்ரிப்ஸி’ பரிசோதனைக்கு உட்படுத்தினால் சிறுநீரகப் பாதையில் தேங்கியுள்ள கற்கள் அதிர்வலைகளால் பொடிப்பொடியாக்கி வெளியேற்றிவிட முடியும்.

தகவல் : சென்னை அலுவலகம்