(எம்.எப்.எம்.பஸீர்)

46 வருடங்களுக்கு முன்னர் 10 வயதான தன்னையும் தனது இரு நண்பர்களையும்,  சுவிட்சர்லாந்தில் பிரஜை ஒருவர் துஷ்பிரயோகம் செய்ததாக் கூறி 56 வயதான ஒருவர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். 

இந் நிலையில் இந்த விடயம் தொடர்பில் நீர்க்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இலங்கையில்  குடியுரிமை உள்ள  சுவிட்சர்லாந்து பிரஜையான தற்போது 80 வயதான நபர் ஒருவருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு கிடைத்துள்ளதாக  பொலிஸார் கூறினர்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ள 56 வயதான நபரும் சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் நிலையில், கடந்த வருடம் இலங்கைக்கு வந்து இங்கு தங்கியிருக்க ஆரம்பித்துள்ளார். 

இந் நிலையிலேயே 56 வயதான குறித்த நபருக்கு கடந்த 46 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் அடிக்கடி ஞாபகத்துக்கு வருவதாகவும் அதனால் தான் மன உழைச்சலுக்குள்ளாவதால் இந்த முறைப்பாட்டை தற்போது அளித்ததாகவும் முறைப்பாட்டில் குறித்த நபர் சுட்டிக்கடடியுள்ளார்.