வவுனியா வைத்தியசாலையில் இன்று ரயிலில் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் 60தொடக்கம் 65வயது மதிக்கத்தக்க வயோதிபரை இனங்காண உதவிடுமாறு வவுனியா வைத்தியசாலை நிர்வாகத்தினர் கோரியுள்ளனர்.

இன்று காலை வவுனியா ஈரப்பெரியகுளம் ரயில்க் கடவைப்பகுதியில்  படுகாயமடைந்து சுய நினைவு இழந்த நிலையில் காணப்பட்ட 60 தொடக்கம் 65வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இவர் பற்றிய தகவல்கள் எவையும் தெரியவில்லை ரயில் பயணித்தபோது கீழே வீழ்ந்து காயமடைந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்ய முயற்சித்திருக்கலாம் அல்லது தவறி விழுந்திருக்கலாம் என்று பல்வேறு சந்தேகங்களுடன் குறித்த வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு விபத்து பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

இவர் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகத்தினர் கோரியுள்ளனர்.