யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரிய வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனை இன்று ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது , யாழ்மாவட்டத்தில் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாது மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் முன்னாள் கட்டளை தளபதிகள் மேற்கொண்ட மக்களுக்கான மனிதாபிமான பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ளவேண்டும் என்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் தேவைகளான வீடுகள் அமைத்தல் மற்றும் கிணறுகள் சுத்தம் செய்து கொடுக்கும் பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறும் ஆளுநர் இதன்போது கேட்டுக்கொண்டார். 

எனவே, இது தொடர்பில் சாதகமாக பரீசீலனைகள் மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக புதிய கட்டளைத்தளபதி ஆளுநரிடம் நம்பிக்கை தெரிவித்தார்.