(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண  சபை தேர்தலை நடத்த  பொதுஜன பெரமுன  முழுமையான  ஒத்துழைப்பு வழங்கும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, கோத்தபாய ராஜபக்ஷ நாடு திரும்பியதும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவினவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று  தற்போது அரசியல்  களத்தில் காணப்படும் சர்ச்சைக்கு  ஆகஸ்ட் மாதம் 11 ம் திகதி தீர்வு கிடைக்கும்.  

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவை பொதுஜன  பெரமுனவின்  ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் பங்காளி கட்சிகள்  இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.