MSc கற்கைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் SLIIT

Published By: Priyatharshan

06 May, 2016 | 11:05 AM
image

MSc கற்கைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகளை இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகம் ஆரம்பித்துள்ளது.

இலங்கையின் முதல் தர பட்டப்படிப்புகளை வழங்கும் கல்வியகம் எனும் வகையில், இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகம், மக்கள், கலாசாரம் மற்றும் நற்பெயர் ஆகியவற்றை பேணும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது.

 7000க்கும் அதிகமான மாணவர்கள் இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தில் இதுவரையில் கல்வி பயின்று வருவதுடன், பட்டப்பின்படிப்பு, பட்டக்கீழ் படிப்பு தொடர்பான பல கற்கைகளை கல்வியகம் வழங்கி வருகிறது.

மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் வகையில், அறிவு அடிப்படையிலான கற்கைகளான MSc in Information Technology, MSc in Information Management, MSc in Information Systems, MSc in IT (Specializing in Cyber Security) kw;Wk; MSc in Enterprise Applications Development (Sheffield Hallam University, UK) ஆகியவற்றை பின்பற்றுவதற்கு வாய்ப்புகளை வழங்க இலங்கை தகவல் தொழில்நுட்பக் கல்வியகம் முன்வந்துள்ளது.

தனது MSc கற்கைநெறி ஊடாக தகவல் தொழில்நுட்பத்துறையில் பட்டதாரிகளை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதுடன், தமது நிபுணத்துவத்தை தொழிற்துறை மற்றும் வணிக சூழலில் உள்வாங்க திட்டமிட்டுள்ளது. 

இந்தகற்கைகளின் மூலமாக மாணவர்களின் இயலுமைகளை மேம்படுத்தி மதிப்பிட்டு வெவ்வேறு துறைகளில் அவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வசதிகளை கல்வியகம் வழங்குகிறது. 1ஆம் வருட MSc கற்கையை மாணவர்கள் பூர்த்தி செய்த பின்னர், அவர்களுக்கு பட்டப்பின்படிப்புக்கான டிப்ளோமா வழங்கப்படுகிறது.

ஆர்வமுள்ள மாணவர்கள்ரூபவ் தமது விண்ணப்பப்படிவங்களை 2016 மே மாதம் 12 ஆம் திகதி முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. இந்த கற்கைகளுக்கான தெரிவு என்பது தகுதிகாண் பரீட்சை மற்றும் மே மாதம் 27 ஆம் திகதி நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் ஊடாக மேற்கொள்ளப்படும். இந்த கற்கை நெறி ஜுலை 2ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தில் பெற்றுக் கொண்ட அனுபவம் தொடர்பில் பழைய மாணவரான துமின் சஹிஹெட் கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தில் எனக்கு கற்கையை பூர்த்தி செய்ய வாய்ப்புக் கிடைத்தமை என்பது உண்மையில் பெரும் மகிழச்சியூட்டும் விடயமாக அமைந்துள்ளது. குறிப்பாக திறமை மற்றும் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்களிடமிருந்து பல புதிய விடயங்களை பயின்று கொள்ளக்கூடியதாக இருந்தது.

இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தில் தொடர்ந்திருந்த ஆய்வு அடிப்படையில் அமைந்த MSc கற்கை மூலமாக பாடங்கள் தொடர்பில் ஆழமான அறிவை பெற முடிந்ததுடன், எனது வெளிப்படுத்தல் ஆளுமைகளை மேம்படுத்திக் கொள்ளவும் உதவியாக அமைந்திருந்தது. தகவல் தொழில்நுட்பத்தில் MSc கற்கையை பூர்த்தி செய்ததன் மூலமாக எனது தொழில் வாழ்வில் உயர்ந்த நிலைகளுக்கு செல்ல பெரிதும் உதவியாக இருந்தது” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58