(செ.தேன்மொழி)

‍சூதாட்டக்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

களுத்துறை - தொடங்கொட பகுதியில் சட்டவிரோத மதுப்பான நிலையத்தை முற்றுகையிட சென்ற பொலிசார் அங்கு சூதாட்ட நிலையம் காணப்பட்டுள்ளது. 

இதன்போது அங்கிருந்த சந்தேக நபர்களை கைது செய்ய முற்பட்ட போது பொலிசார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தொடங்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

சம்பவத்தில் இரண்டு பொலிசார் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.