12 வது உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றதையடுத்து இங்கிலாந்து அணி வீரர்கள்  அந்நாட்டு பிரதமர் தெரசா மேயை இன்று சந்தித்துள்ளனர்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று முந்தினம் லண்டனிலுள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின. 

இந்த போட்டி மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக அமைந்தது. இதில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி இலக்காக நிர்ணயித்த 241 ஓட்டங்களை, இரண்டாவதாக களமிறங்கிய இங்கிலாந்து அணி சமன் செய்தது. 

எனவே, வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. இதில் இரு அணிகளும் தலா 15 ஓட்டங்களை எடுத்தன. இதனால் சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை விட அதிக பவுண்டரிகள் எடுத்திருந்ததால் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது. 

இதனால் உலக கிண்ணத்தை இங்கிலாந்து அணி முதன்முறையாக சொந்த மண்ணிலேயே கைப்பற்றியது. இதனை இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள பிரதமர் தெரசா மேயினை சந்தித்து இங்கிலாந்து அணி வீரர்கள் கொண்டாடினர். 

போட்டியில் வென்ற கிண்ணத்தைக் கையில் ஏந்தியவாறு பிரதமர் தெரசா மே மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் மகிழ்ச்சியுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.