(இராஜதுரை ஹஷான்)

உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் பொதுஜன பெரமுன அனைத்து இன மக்களின் வாக்குகளையும் பெற்று வெற்றிப் பெறும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சிறுபான்மையினருக்கு எதிரானவர் என ஆளும் தரப்பினர் பொய் பிரச்சாரம் பரப்பி வருவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் தேர்தல் நெருங்கும் காலத்தில் சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெறுவதற்காக போலியான குற்றச்சாட்டுக்களை  ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அவர் குடும்பத்தார் மீதும் சுமத்தி தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் என்றும் இடம் பெறவுள்ள தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு  நிச்சயம்  நாட்டு மக்கள் இனவேறுபாடு இன்றி ஆதரவு வழங்குவார்கள் என்றும் குறிப்பிட்டார்.