(செ.தேன்மொழி)

களுத்துறை பகுதியில் ஹெரோயின், ஒருத்தொகைப் பணம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் பயன்படுத்தும் தொடர்பாடல் சாதனத்துடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரளை பகுதியைச் சேர்ந்த 24 - 33 வயதுக்கிடைப்பட்ட ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடமிருந்து 2 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின், வோக்கி டாக்கி , 80 ஆயிரத்து 550 ரூபாய் தொகைப் பணமும் மீட்கப்பட்டது.

சந்தேக நபர்கள் சிறைச்சாலை கைதியொருவரை பார்ப்பதற்காக காரில் சென்றுக் கொண்டிருந்த போதே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.