சியம்பலாண்டுவை பகுதியில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்குதலில் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் சியம்பலாண்டுவை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

தற்போது குறித்த பகுதியில் கடும் மழை பெய்து வருவதினால் இடி மின்னல் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்நிலையில் சியம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் கணணி தொழிநுட்ப பணியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஈடுபட்டிருந்தார். இதன்போதே குறித்த அதிகாரி மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

சியம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றி வரும்  எஸ். ஏ. ரேவத்த என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன் இந்த இடி மின்னல் தாக்குதலினால் பொலிஸ் நிலையத்தின் தொலைத்தொடர்பு மின் சாதனங்கள் அனைத்தும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளன.