மும்பை, டோங்கிரி பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40 முதல் 50 பேர் வரை அக் கட்டடத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 80 வருடங்கள் பழமைவாய்ந்த மேற்படி கட்டடம் இன்று முற்பகல் 11.40 மணியளவிலேயே இடிந்து வீழ்ந்துள்ளதைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கட்டடம்  இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த இடிபாடுகளில் சிக்கிய மூன்று குழந்தைகள் உட்பட ஐவர் இதுவரை மீட்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வந்தது. இந்த கனமழையைத் தொடர்ந்து டோங்கிரி பகுதியில் மழைநீர் தேங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.