பிரதமரால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட காணி தொடர்பான சட்ட மூலம் குறித்து ஊவா மாகாண சபையின் கருத்துக்களை கேட்கவில்லை. இது ஒரு சட்ட விரோத செயற்பாடாகுமென ஊவா மாகாகண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க குறிப்பிட்டார்.

Image result for சாமர சம்பத் தசநாயக்க

ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது முதலமைச்சர் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

13 வது அரசியல் திருத்தச்சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தில் ஏதாவது ஒரு சட்ட மூலம் சமர்பிக்கப்படும் முன் மாகாண சபைகளில் சமர்பித்து அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும். காணி அதிகாரம் மாகாண சபைகளுக்கே இருந்து வருகின்றது. வழமையாக இருந்து வந்த முறையினை பிரதமர் மாற்றியமைக்க முயற்சிக்கின்றார். இதன் மூலம் பாரிய பிரச்சினைகள் எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடும். 

இலங்கையில் மாகாண சபைகளின் அனுமதி மற்றும் கருத்துக்களை கேட்காமல்  பாராளுமன்றத்தில் சமர்பித்து சட்டமூலமொன்று நிறைவேற்றப்படும் பட்சத்தில் அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லக்கூடிய  நிலையும் உருவாகும்.

நாட்டின் ஒன்பது மாகாண சபைகளின் எட்டு மாகாண சபைகள் கலையப்பட்டு மாகாண ஆளுனர்களின் பொறுப்புக்களிலேயே இருந்து வருகின்றன. நாட்டில் ஊவா மாகாண சபை மட்டுமே தற்போது செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. அச்சபையின் முதலமைச்சர் மட்டுமல்லாது முழுநாட்டிலும் முதலமைச்சராக இருப்பது நான் மட்டுமேயாகும். 

ஊவா மாகாண காணி அமைச்சராகவும் நானே இருந்து வருகின்றேன். சட்ட மூலம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் முன்ஸ்ரீ அது குறித்து எமக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

பாராளுமன்றத்தில் நல்ல விடயங்களை முன்வைக்கப்படும் பட்சத்தில்  நாம் அதனை ஆதரிக்கவே செய்வோம். மாகாண சபைகளின் அனுமதியின்றி பாராளுமன்றத்தில் சட்ட மூலமொன்று நிறைவேற்ற முடியாது. இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.” என்றார்.