கோதுமை மா கிலோ ஒன்றின் விலை இன்றிலிருந்து 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ப்ரீமா நிறுவனம் அறிவித்துள்ளது. 

எனினும் விலை அதிகரிப்பிற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை. 

விலை அதிகரிப்பு தொடர்பில் நாட்டின் அனைத்து முகவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும், கோதுமை மா மீது விதிக்கப்படும் வரிக்கமைய ஒரு கிலோ மாவின் விலை 8 ரூபா 50 சதத்தினால் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் ப்ரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.