( எம்.எம்.சில்வெஸ்டர்)

பாடசாலை அணிகளுக்கிடையிலான ஜனாதிபதி கிண்ண ரக்பி போட்டி – 2019 இன் அரை இறுதிப் போட்டிகளில் வெற்றியீட்டிய கொழும்பு புனித பேருவானவர் கல்லூரி, கொழும்பு வெஸ்லி கல்லூரி ஆகியன இறுதிப் போட்டிக்கு  முன்னேறின.

Related image

கொழும்பு றோயல் கல்லூரி விளையாட்டுத் தொகுதியில் நடைபெற்ற கண்டி வித்தியார்த்த கல்லூரி அணிக்கு எதிரான முதலாவது அரை இறுதிப் போட்டியில் விளையாடிய கொழும்பு வெஸ்லி கல்லூரி அணி 36க்கு 25 என்ற புள்ளிகள் கணக்கில் வித்தியார்த்த கல்லூரி அணியை வீழ்த்தியது.  

பாடசாலை ரக்பி அரங்கில் பலம்வாய்ந்த இரண்டு அணிகளான நடப்புச் சம்பியன் புனித பேதுருவானவர் அணிக்கும் இசிபத்தன அணிக்கும் இடையிலான இரண்டாவது அரை இறுதிப் போட்டி றோயல் கல்லூரி விளையாட்டுத் தொகுதியில் நடைபெற்றது.

இப்போட்டியில் கொழும்பு இசிபத்தன கல்லூரி அணியை 19க்கு 14 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டிய கொழும்பு பேதுருவானவர் கல்லூரி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.